1. சாக்லேட் வேண்டாம்!

வந்தனாவின் தாத்தா தினமும் மாலையில் நடைப்பயிற்சி செய்யும்போது, வந்தனாவும் அவருடன் செல்வாள்.

நடந்து செல்லும்போது எட்டு வயதான வந்தனா பல்வேறு விஷயங்களைப் பற்றித் தன் தாத்தாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்வாள்.

ருமுறை, வந்தனா தன் தாத்தாவிடம் "தாத்தா! சில பேர் ரோடு ஓரமா உக்காந்துக்கிட்டிருக்காங்க. நடந்து போறவங்க சில பேர் அவங்களுக்குக்காசு போடறாங்களே,அது ஏன்?" என்றாள்.

"நம்மகிட்ட காசு இருக்கு. அதனால நமக்கு வேணுங்கறதைக் கடையில காசு கொடுத்து வாங்கிக்கறோம். சில பேர்கிட்ட காசு இருக்காது. அதனால அவங்க மத்தவங்க்கிட்ட உதவி கேக்கறாங்க. சில பேர் அவங்களுக்குக் காசு கொடுத்து உதவறாங்க!" என்றார் தாத்தா.

"நீ ஏன் தாத்தா யாருக்கும் காசு போடறதில்ல?" என்றாள் வந்தனா.

தாத்தாவுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. சில விநாடிகளுக்குப் பிறகு, "போடுவேம்மா! ஆனா எல்லாருக்கும் எப்பவுமே போட முடியாது இல்ல? அதோட நான் வாக்கிங் போறப்ப கையில காசு எடுத்துக்கிட்டு வரது இல்ல!" என்றார்.

"காசு கேக்கறவங்க ஏன் தாத்தா 'சாமி, தர்மம் பண்ணுங்க'ன்னு கேக்கறாங்க?" என்றாள் வந்தனாதொடர்ந்து.

"மத்தவங்களுக்கு உதவி செஞ்சா, அது தர்மம். அதனாலதான் 'தர்மம் பண்ணுங்கன்னு கேக்கறாங்க."

"தர்மம்னா?"

"தர்மம்னா அறம்!"

"அறம்னா?"

"மத்தவங்களுக்கு உதவி செய்யறது?"

"இல்லாதவங்களுக்குக் காசு கொடுத்து உதவறதா?"

"இல்லாதவங்களுக்குக் கொடுத்து உதவறது அறம்தான். ஆனா அறம் செய்யறதுன்னா நல்லது செய்யறதுன்னும் அர்த்தம். உதவி செய்யறது, உண்மை பேசறது, செய்ய வேண்டிய வேலைகளை சரியாச் செய்யறது எல்லாமே அறம்தான்!" என்றார் தாத்தா.

டுத்த நாள் இருவரும் நடந்து வரும்போது, வழியில் தன் சட்டைப் பையிலிருந்து ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து ஒரு பிச்சைக்காரரின் தட்டில் போட்டாள் வந்தனா.

"உங்கிட்ட ஏது காசு?" என்றார் தாத்தா வியப்புடன்.

"சாக்லேட் வாங்கிக்கறதுக்காக அப்பா கொடுத்தாரு!" என்றாள் வந்தனா.

"அப்புறம் உனக்கு சாக்லேட் வாங்கக் காசு?" என்றாள் தாத்தா.

"சாக்லேட்தான் நிறைய தடவை வாங்கிக்கிறேனே! இன்னிக்கு ஒருநாள் சாக்லேட் இல்லாட்டா பரவாயில்ல!" என்றாள் வந்தனா.

தாத்தா வந்தனாவைத் தூக்கிப் பிடித்து அவள் நெற்றியில் முத்தமிட்டார்.

"கீழே போட்டுடப் போற தாத்தா!" என்றாள் வந்தனா சிரித்தபடி.

ஆத்திச்சூடி

1. அறம் செய விரும்பு

பொருள்:
மற்றவர்களுக்கு உதவி செய், நன்மை பயக்கும் செயல்களைச் செய், 

Comments