Posts

Showing posts from April, 2023

1. சாக்லேட் வேண்டாம்!

Image
வந்தனாவின் தாத்தா தினமும் மாலையில் நடைப்பயிற்சி செய்யும்போது, வந்தனாவும் அவருடன் செல்வாள். நடந்து செல்லும்போது எட்டு வயதான வந்தனா பல்வேறு விஷயங்களைப் பற்றித் தன் தாத்தாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்வாள். ஒ ருமுறை, வந்தனா தன் தாத்தாவிடம் "தாத்தா! சில பேர் ரோடு ஓரமா உக்காந்துக்கிட்டிருக்காங்க. நடந்து போறவங்க சில பேர் அவங்களுக்குக்காசு போடறாங்களே,அது ஏன்?" என்றாள். "நம்மகிட்ட காசு இருக்கு. அதனால நமக்கு வேணுங்கறதைக் கடையில காசு கொடுத்து வாங்கிக்கறோம். சில பேர்கிட்ட காசு இருக்காது. அதனால அவங்க மத்தவங்க்கிட்ட உதவி கேக்கறாங்க. சில பேர் அவங்களுக்குக் காசு கொடுத்து உதவறாங்க!" என்றார் தாத்தா. "நீ ஏன் தாத்தா யாருக்கும் காசு போடறதில்ல?" என்றாள் வந்தனா. தாத்தாவுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. சில விநாடிகளுக்குப் பிறகு, "போடுவேம்மா! ஆனா எல்லாருக்கும் எப்பவுமே போட முடியாது இல்ல? அதோட நான் வாக்கிங் போறப்ப கையில காசு எடுத்துக்கிட்டு வரது இல்ல!" என்றார். "காசு கேக்கறவங்க ஏன் தாத்தா 'சாமி, தர்மம் பண்ணுங்க'ன்னு கேக்கறாங்க?" என்றாள் வந்தனாதொட